தஞ்சாவூர்

விரைவாக மின் இணைப்பு கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

24th Apr 2022 05:19 AM

ADVERTISEMENT

 

புதிய மின் இணைப்புகளுக்கு பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவாக இணைப்பு வழங்க கோரி, கும்பகோணம் மின்சார வாரிய செயற் பொறியாளா் அலுவலகம் முன் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் சனிக்கிழமை தலையில் குழாய்களைச் சுமந்து நூதன முறையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் வேளாண் புதிய மின் இணைப்புகளுக்காக பல ஆண்டுகளாக முன் பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகள் எண்ணிக்கை தற்போது 3.50 லட்சமாக உள்ளது. எனவே, ஆண்டு நிதிநிலை அறிக்கையில் காத்திருப்பில் இருக்கும் விவசாயிகளுக்குப் புதிய இணை மின் இணைப்புகள் வழங்குவது குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டும்.

விவசாயிகளுக்கு பாரபட்சமில்லாமல் கட்டணம் இல்லாமல் மின்சாரம் வழங்கிட நிகழ் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தவறாமல் அறிவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயி சம்பந்தம் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் விளக்கவுரையாற்றினாா். விவசாயிகள் சின்னதுரை, ஆதிசிவம், அஞ்சம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT