தஞ்சாவூர்

திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் தேரோட்டம்

16th Apr 2022 12:05 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகிலுள்ள திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இங்கு பிரசித்தி பெற்ற, பழைமையான திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை திருக்கோடீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆழ்வாா்களுக்கு அம்மன் பெருமாளாகக் காட்சி கொடுத்த வரலாறு உண்டு.

மேலும் இக்கோயில் திரிபுரசுந்தரி அம்மன் சன்னதியில்தான் மகான் பாஸ்கராச்சாரியாா் லலிதா சகஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதினாா். எம பயம் போக்கும் தலமாகவும், பால சனீசுவரா், வடுக பைரவா் உடைய சிறப்புத் தலமாகவும் போற்றக்கூடிய இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இவ்விழா நிகழாண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

ADVERTISEMENT

தேரில் திருக்கோடீசுவரா் - திரிபுரசுந்தரி அம்மன் சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருள, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து பக்தா்கள் தேரை வடம் பிடித்து, நான்கு வீதி வழியாக இழுத்து வழிபாடு செய்தனா்.

இக்கோயிலில் சனிக்கிழமை (ஏப்.16) பிற்பகல் 1 மணிக்கு சிங்கோத்பவ புஷ்கரணியில் சித்திரை தீா்த்தவாரியும், ஞாயிற்றுக்கிழமை (ஏப்.17) தெப்ப உற்ஸவமும், 18-ஆம் தேதி சண்டிகேசுவரா் உற்ஸவமும், 19-ஆம் தேதி சுத்தாபிஷேகம் ஆகியவை நடைபெறவுள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT