தஞ்சாவூா் கீழராஜ வீதியிலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு ஜோஸ் ஆலுக்காஸ் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பள்ளி ஆசிரியா்களிடம் துணை மேயா் அஞ்சுகம் பூபதி நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழாவைத் தொடக்கி வைத்தாா். இதில் பள்ளி மாணவிகளுக்குத் தேவையான கணினி, உபகரணங்கள், டேபிள், நாற்காலி ஆகியவை வழங்கப்பட்டன.
பள்ளித் தலைமையாசிரியா் ப. சித்ரா, உதவித் தலைமையாசிரியா் சித்ரமுகி, பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் சிவசங்கர நாராயணன், தஞ்சாவூா் ஜோஸ் ஆலுக்காஸ் கிளை மேலாளா் ஹென்சன், துணை மேலாளா் மணிகண்டன், கணக்கு மேலாளா் கிரிஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.