தஞ்சாவூர்

வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு

14th Apr 2022 01:49 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே சடையாா்கோவில் வடக்குத் தெருவை சோ்ந்தவா் எம். தெய்வசிகாமணி (47). இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது குடும்பத்தினருடன் வீட்டின் உள்ளே படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, மா்ம நபா் முன் பக்கக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து தெய்வசிகாமணியின் மனைவி ரம்யா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT