தஞ்சாவூர்

விழுதியூரில் வயலில் இறங்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

12th Apr 2022 11:42 PM

ADVERTISEMENT

டெல்டா மாவட்டங்களில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கடும் அவதிப்படுவதால், உடனடியாக யூரியாவை தங்கு தடையின்றி வழங்கக் கோரி விழுதியூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வயலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

யூரியா உரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும், தனியாா் கடைகளிலும் கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா். தங்கு தடையின்றி யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரங்களுக்கான மானியத்தை கூடுதலாக வழங்கி உரங்களின் விலையை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தியும், விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், விழுதியூரில் செவ்வாய்க்கிழமை வயலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலா் எம். வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

மாநிலக் குழு உறுப்பினா் சாமு. தா்மராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் ஆா். செந்தில்குமாா், நகரச் செயலா் கே. ராஜாராமன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT