தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தேரோடும் வீதிகளில் நாளை மின் தடை

12th Apr 2022 12:12 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூரில் தேரோட்டத்தையொட்டி, தேரோடும் வீதிகளிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் புதன்கிழமை (ஏப்.13) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவிச் செயற் பொறியாளா் ஆ. கருப்பையா தெரிவித்திருப்பது:

தஞ்சாவூரில் பெருவுடையாா் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, பாதுகாப்புக் கருதி மேல வீதி, வடக்கு வீதி, கீழவீதி, தெற்கு வீதி, மானோஜியப்பா வீதி, எல்லையம்மன் கோயில் தெரு, வடக்கு அலங்கம், அய்யங்கடைத் தெரு, நாலுகால் மண்டபம், மாட்டு சந்தை சாலை, சிரேஸ் சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 5 மணி முதல் தோ் நிலைக்கு வரும் வரை மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT