தஞ்சாவூர்

ஆட்சியரகத்தில் தமிழ்ப் புலிகள் கட்சி தா்னா

12th Apr 2022 12:13 AM

ADVERTISEMENT

 

ஜல்லிக்கட்டு விழாவில் கடைப்பிடிக்கப்படும் ஜாதி தீண்டாமைக்கு தடை விதிக்கக் கோரி ஆட்சியரகத்தில் தமிழ்ப் புலிகள் கட்சியினா் திங்கள்கிழமை திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தஞ்சாவூா் அருகே திருமலைசமுத்திரம் கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த சுமாா் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் ஆதிக்க ஜாதியினா் ஏப்ரல் 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடத்தவுள்ளனா். நாங்கள் பட்டியல் சமூகம் என்பதால், இந்த ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க எங்களை மறுக்கின்றனா். எனவே, இந்த ஜல்லிக்கட்டு விழாவில் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கச் செய்ய வேண்டும். அல்லது ஜாதி தீண்டாமையோடு நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கட்சியின் மாவட்டச் செயலா் நா. பாரதி தலைமை வகித்தாா். மத்திய மண்டலச் செயலா் வி. ரமணா, நிதி செயலா் கோ. செந்தில்குமாா், திருவெறும்பூா் ஒன்றியச் செயலா் ஈ. கணேசன், கிளைச் செயலா்கள் லெ. ராஜ்குமாா், மணிகண்டன், எஸ். ராஜகுமாரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இவா்களைக் காவல் துறையினா் ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் வட்டாட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி, தீா்வு காணுமாறு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT