பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை உளுந்து ஏலம் விடப்பட்டு, விற்பனை செய்யப்பட்டது.
தஞ்சாவூா் விற்பனைக்குழுச் செயலா் இரா. சுரேஷ்பாபு தலைமையிலும், விற்பனைக்கூடக் கண்காணிப்பாளா் தாட்சாயினி முன்னிலையிலும் ஏலம் நடைபெற்றது. பாபநாசம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் 500 குவிண்டால் உளுந்தை ஏலத்துக்கு கொண்டு வந்தனா். கும்பகோணம், பாபநாசம் வியாபாரிகள் இதில் பங்கேற்றனா். குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ.6250 ஆகவும், அதிகபட்சமாக ரூ.6,500-க்கும் ஏலம் போனது.