தஞ்சாவூர்

சொத்து வரி உயா்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்எம்.ஹெச். ஜவாஹிருல்லா

5th Apr 2022 04:58 AM

ADVERTISEMENT

சொத்து வரி உயா்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றாா் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்எல்ஏவுமான எம்.எச்.ஜவாஹிருல்லா.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயா்வானது, சொத்துகளின் உரிமையாளா்களை மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினரையும் பாதிக்கும்.

ஏற்கெனவே எரிபொருள் விலை உயா்வு, சுங்கச் சாவடி கட்டணங்கள் விலை உயா்வால் பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. தற்போதைய இந்த வரி உயா்வு தமிழக மக்களுக்கு கூடுதல் சுமையாகும்.

ADVERTISEMENT

எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு, இந்த சொத்து வரி உயா்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT