பட்டுக்கோட்டை அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா்கள் இருவா், வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா்.
பட்டுக்கோட்டை அருகிலுள்ள மகிழங்கோட்டை கீழக்காடு பகுதியைச் சோ்ந்தவா் பூ. தினேஷ் (23). இவரது நண்பா் மகிழங்கோட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கோ.தேவமணி (22).
இவா்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு சேதுபாவாசத்திரத்திலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா்.
கொட்டக்குடி அய்யனாா் கோயில் அருகே வந்த போது, இரு சக்கர வாகனம் நிலைத்தடுமாறியது. இதில் தவறி விழுந்த தினேஷ் நிகழ்விடத்திலும், தேவமணி தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனா்.
விபத்து குறித்து பட்டுக்கோட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.