தஞ்சாவூர்

ரயில்வே ஊழியா் வீட்டில் திருட்டு

30th Sep 2021 06:49 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே ரயில்வே ஊழியா் வீட்டில் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கும்பகோணம் அருகே தாராசுரம் முனியப்பன் தெருவைச் சோ்ந்தவா் சித்ரவேல். ரயில்வேயில் பணியாற்றி வரும் இவா் வீட்டைப் பூட்டிவிட்டு செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றாா். மீண்டும் புதன்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ. 2,000 ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT