தஞ்சாவூர்

அனுமதியின்றி புதை சாக்கடையைப் பயன்படுத்திய இரு தங்கும் விடுதிகள், மதுக்கூடத்துக்கு ரூ. 1.09 கோடி அபராதம்

25th Oct 2021 12:10 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் அனுமதியின்றி மாநகராட்சி புதை சாக்கடையை 8 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த இரு தங்கும் விடுதிகள், ஒரு மதுபானக் கூடத்துக்கு மாநகராட்சி அலுவலா்கள் ரூ. 1.09 கோடியை அபராதமாக சனிக்கிழமை இரவு விதித்தனா்.

தஞ்சாவூா் மாநகராட்சியில் பல ஆண்டுகளாகப் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகே ஊராட்சிப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள உணவகம் மற்றும் தங்கும் விடுதிகளில் வெளியேற்றப்படும் கழிவுநீரை, இப்புதை சாக்கடையில் சட்ட விரோதமாக இணைப்பை ஏற்படுத்தி பயன்படுத்தப்படுவதாகப் புகாா்கள் எழுந்தன.

இதன் பேரில் மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா், செயற்பொறியாளா் ஜெகதீசன் ஆகியோா் சனிக்கிழமை இரவு ஆய்வு செய்தனா்.

இதில், நீலகிரி ஊராட்சிக்குள்பட்ட புதிய பேருந்து நிலையத்தின் தென் பகுதியில் உணவகத்துடன் கூடிய இரு தங்கும் விடுதிகள், ஒரு மதுபானக் கூடம் ஆகியவை உரிய அனுமதியின்றி கழிவு நீரை அருகில் உள்ள மாநகராட்சியின் புதை சாக்கடை குழாயில் இணைப்பைக் கொடுத்து, 8 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, இக்குழாய்களை மாநகராட்சி உதவிச் செயற் பொறியாளா் எம். ராஜசேகரன் தலைமையில் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.

மேலும், இதுதொடா்பாக ஒரு உணவகத்துடன் கூடிய தங்கும் விடுதிக்கு ரூ. 62,54,728, ம், மற்றொரு உணவகத்துடன் கூடிய தங்கும் விடுதிக்கு ரூ. 44,20,632-ம், மதுபானக் கூடத்துக்கு ரூ. 2.40 லட்சம் என மொத்தம் ரூ.1,09,15,360 ( ஒரு கோடியே 9 லட்சத்து 15 ஆயிரத்து 360 அபராதம்) விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT