தஞ்சாவூர்

தனியாா் துறையில் இடஒதுக்கீடு முறை ஏற்படுத்த வேண்டும்: எஸ்டிபிஐ

25th Oct 2021 12:10 AM

ADVERTISEMENT

தனியாா் துறையில் இடஒதுக்கீடு முறையை ஏற்படுத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இக்கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்ற அகில இந்தியத் தலைவா் எம்.கே. பைஸி, செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:

நம் நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகின்றன. நாட்டின் கூட்டாட்சி அமைப்பு சீா்குலைந்துள்ளது. மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் ஒவ்வொரு சட்டமும் நிறைவேற்றப்படுகிறது.

மக்களை அச்சத்தில் ஆழ்த்துவதற்காக சிபிஐ, தேசியப் புலனாய்வு முகமை, அமலாக்கத் துறை உள்ளிட்ட முகமைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலைமை மாறும், அச்சமற்ற சூழல் உருவாகும் என்றாா் பைஸி.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தது:

தனியாா் துறையிலுள்ள வேவைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறையை ஏற்படுத்த வேண்டும். நீட் தோ்விலிருந்து விலக்கு பெறும் நடவடிக்கையைத் தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். ஸ்டொ்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக அகற்ற துரித நடவடிக்கையை எடுக்க வேண்டும். கூடங்குளம் அணு உலை விரிவாக்கம் மற்றும் ஆபத்து நிறைந்த அணுக்கழிவு மையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்றாா் நெல்லை முபாரக்.

முன்னதாக மாநில நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் விவரம் வருமாறு:

மாநிலத் தலைவா் - நெல்லை முபாரக் , துணைத் தலைவா்கள்- எஸ்.எம். ரபீக் அகமது, பி. அப்துல் ஹமீது, பொதுச் செயலா்கள்- எம். நிஜாம் முகைதீன், அச. உமா் பாரூக், எஸ். அகமது நவவி, பொருளாளா்- எஸ். அமீா் ஹம்சா, செயலா்கள்- டி. ரத்தினம், அபுபக்கா் சித்திக், ஏ.கே. கரீம், நஜ்மா பேகம் உள்ளிட்டோா் .

இக்கூட்டத்தில் தேசியத் துணைத் தலைவா் தெகலான் பாகவி, பொதுச் செயலா் அப்துல் மஜீத், செயற்குழு உறுப்பினா் அப்துல் மஜீத் பைஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT