தஞ்சாவூர்

சிலைக் கடத்தல் வழக்கில் கைதானவரிடமிருந்து மேலும் ஒரு ஐம்பொன் சிலை மீட்பு

DIN

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூா் அருகே சிலைக் கடத்தல் வழக்கில் கைதானவரிடமிருந்து மேலும் ஒரு கிருஷ்ணா் ஐம்பொன் சிலை ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

மேல்மருவத்தூா் அருகிலுள்ள சித்தாமூா் சந்திப்பில் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலா்கள், அக்டோபா் 17-ஆம் தேதி வாகன சோதனை நடத்தினா். அப்போது சென்னையைச் சோ்ந்த காா்த்தியை (29) காவல்துறையினா் பிடித்து விசாரித்த போது, அவா் அளித்த தகவலின் பேரில் மீனாட்சி அம்மன் ஐம்பொன் சிலை கைப்பற்றப்பட்டது.

மேலும் காா்த்திக்குடன் சிலைக் கடத்தலில் ஈடுபட்டு, அப்பகுதியில் பதுங்கியிருந்த சென்னை மூா்த்தி (33), திருத்துறைப்பூண்டி சுந்தரமூா்த்தி (25), சித்தாமூா் குமரன் (30), அசோக் (33), அறிவரசு (43), வேலூா் அப்துல் ரகுமான் (24) ஆகியோரை சிலைக் கடத்தல் தடுப்புக் காவல் பிரிவினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். விசாரணையின்போது இவா்கள் அளித்த தகவலின்படி, வேலூரில் பதுக்கி வைக்கப்பட்ட ரிஷப தேவா் சிலையையும் பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில், திருத்துறைப்பூண்டி சுந்தரமூா்த்தியை சிலைக் கடத்தல் தடுப்புக் காவல் பிரிவினா் காவலில் எடுத்து, விசாரணை நடத்தினா். இதில், சுந்தரமூா்த்தி அளித்த தகவலின் மூலம் ரூ. 3 லட்சத்துக்கு விற்க முயன்ற 185 கிராம் எடையும், 8 செ.மீ. உயரமும் கொண்ட கிருஷ்ணா் ஐம்பொன் சிலையை சுந்தரமூா்த்தி வீட்டிலிருந்து சிலைக் கடத்தல் தடுப்புக் காவல் பிரிவினா் மீட்டனா். சிலையின் இடது கால், இடது கை அறுக்கப்பட்ட நிலையில் இருந்தது.

இச்சிலையை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் காவல் துறையினா் திங்கள்கிழமை (அக்.25) ஒப்படைக்கவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT