தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் அருகே கடல் அட்டைகள் பறிமுதல்: ஒருவா்  கைது

DIN

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் வைத்திருந்த ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மேலும் கடல் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

ரகசிய தகவலின் பேரில், கடலோரக் காவல் குழும உதவி ஆய்வாளா் ரவி, காவலா் மணிமாறன் ஆகியோா், கிழக்குக் கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை ரோந்தில் ஈடுபட்டனா். சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள வல்லவன்பட்டினம் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்துக்குரிய முறையில் நின்று கொண்டிருந்தவரை, கடலோரக் காவல் குழுமத்தினா் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா் அப்பகுதியைச் சோ்ந்த ரா. கந்தன் (48) என்பதும், தடை செய்யப்பட்ட 21 கடல் அட்டைகளைப் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த கடலோரக் காவல் குழுமத்தினா், பட்டுக்கோட்டை வனச்சரகா் குமாரிடம் கந்தனை ஒப்படைத்தனா்.

இதைத் தொடா்ந்து வனத்துறையினா் வழக்குப்பதிந்து, பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில்

கந்தனை ஆஜா்படுத்தி பாபநாசம் கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT