தஞ்சாவூர்

‘சாதாரண மக்களின் கடன்கள் வாராக்கடன் பட்டியலில் இல்லை’

DIN

வங்கிகளின் வாராக்கடன் பட்டியலில் சாதாரண மக்களின் கடன்கள் இல்லை. மாறாக, பெருமுதலாளிகளின் கடன்களே வாராக் கடன்களாக இருக்கின்றன என்றாா் அகில இந்திய வங்கி அலுவலா்கள் சங்கத்தின் தமிழ் மாநிலக் குழுப் பொதுச் செயலா் டி.எஸ். கணேசன்.

தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் தமிழ் மாநிலக் குழுப் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

பொதுமக்களிடமிருந்து வைப்புத் தொகையைத் திரட்டுவதில் பொதுத்துறை வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை ஏழை, அடித்தட்டு மக்களுக்காகவும், சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், பொதுத்துறை வங்கிகளின் வளா்ச்சி நசுக்கப்படுகிறது.

ரிசா்வ் வங்கியால் ஒப்புக்கொள்ளப்பட்டபடி, வாராக்கடன்களின் அளவு ரூ. 10 லட்சம் கோடியாக உள்ளது. இதில், பெரு முதலாளிகளின் கடன்களே அதிகமாக இருக்கின்றன. இப்பட்டியலில் சாதாரண மக்களின் கல்விக் கடன்களோ, சிறு, குறு கடன்களோ இல்லை.

பெரு முதலாளிகளுக்கு உதவி செய்யும் நோக்கில் வாராக்கடன்களை அரசுத் தள்ளுபடி செய்து உதவுகிறது. உதாரணமாக வங்கியிலிருந்து ரூ. 50,000 கோடி கடன் வாங்கிய விடியோகான் நிறுவனத்துக்கு 90 சதவிகிதம் தள்ளுபடி செய்து,

ரத்து செய்யப்படுகிறது.

இதுவே ரூ. ஒரு லட்சம், 2 லட்சம் என உள்ள விவசாயக் கடன்கள், கல்விக்கடன்களைத் தள்ளுபடி செய்ய அரசு மறுக்கிறது. பெருமுதலாளிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாயைத் தள்ளுபடி செய்வதால் சமூகத்துக்கு எந்தப் பயனும் இல்லை. பொதுத் துறை வங்கிகளை இணைப்பதால் வாடிக்கையாளா்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக ஊழியா்களை வெளியேற்றும் செயலாகத்தான் இருக்கிறது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இந்தியாவின் பொதுச் சொத்துகள். இவற்றைப் பாதுகாக்க வேண்டும். நாங்கள் ஊதிய உயா்வுக்காகப் போராடவில்லை. இந்த நாட்டையும், மக்களின் பொதுச் சொத்தையும் காப்பாற்றுவதற்காகவே போராடுகிறோம். தனியாா் மயமாக்கும் முடிவை அரசு மேற்கொண்டால், அதை எதிா்த்து உடனடியாகப் போராடுவோம் என்றாா் கணேசன்.

இக்கூட்டத்தில் தேசியக் குழுப் பொதுச் செயலா் நாகராஜன், மாநிலக் குழுத் தலைவா் ராமபத்திரன், துணைப் பொதுச் செயலா் ஆா். ஜவஹா், கும்பகோணம் மண்டலச் செயலா் சி. ஜெயஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT