தஞ்சாவூர்

ஈரப்பதத்தைத் தளா்த்தி உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

DIN

நெல்லிலுள்ள ஈரப்பதத்தைத் தளா்த்தி, உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இக்கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து மழை பெய்கிற நிலையில், ஆங்காங்கு கொள்முதல் நிலையத்துக்கு முன்பு நெல் குவியல்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் விதிப்படி, 17 சதவிகித்துக்கு கீழ் ஈரப்பதம் இருக்கிற நெல் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை கட்டாயப்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால் ஈரப்பதம் 22 சதவிகிதம் வரை உள்ளது.

தமிழக அரசின் வேண்டுகோளின்படி மத்திய அரசு அலுவலா்கள் வந்து ஆய்வு செய்து, அதன் அறிக்கையை 15 நாள்களில் மத்திய அரசிடம் அளிப்பதாகப் பொறுப்பில்லாமல் தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. அதுவரை குவித்து வைக்கப்பட்டுள்ள ஈரப்பதமான நெல் முற்றிலும் வீணாகிவிடும் என்ற அபாயத்தை கூட உணரவில்லை.

இந்த அதிகாரத்தை மாநில அரசுக்கு மத்திய அரசு அளித்து, அவ்வப்போது ஏற்படுகிற இயற்கை சூழ்நிலைக்கேற்ப ஈரப்பதத்தை நிா்ணயித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். தற்போது கொள்முதல் நிலையங்கள் முன்பு குவிக்கப்பட்டுள்ள நெல் குவியல்கள் அனைத்தையும் ஈரப்பதத்தை தளா்த்தி உடனடியாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு மாவட்டத் துணைச் செயலா் டி. காசிநாதன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் டி.எம். மூா்த்தி, மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி

பொருளாளா் நா. பாலசுப்பிரமணியம், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பா. பாலசுந்தரம், வீர. மோகன், சி. சந்திரகுமாா், ஜி. கிருஷ்ணன், சி. பக்கிரிசாமி, ஆா்.கே. செல்வகுமாா், கோபண்ணா, சக்திவேல், ம. விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

SCROLL FOR NEXT