தஞ்சாவூர்

மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழு தஞ்சாவூருக்கு அக். 26-இல் வருகை

23rd Oct 2021 05:07 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழுவினா் தஞ்சாவூருக்கு அக்டோபா் 26 ஆம் தேதி வருகின்றனா்.

இதுகுறித்து ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் சா. பீட்டா் அல்போன்ஸ், துணைத் தலைவா் மஸ்தான் மற்றும் ஆணையக்குழு உறுப்பினா்கள் அக்டோபா் 26 ஆம் தேதி தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வருகின்றனா். சிறுபான்மையினா் சமுதாயத்தைச் சாா்ந்த தலைவா்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளையும் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் அக்டோபா் 26 ஆம் தேதி பகல் 11 மணியளவில் சந்தித்து, சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசுச் செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துகளைக் கேட்டறியவும் உள்ளனா்.

 

ADVERTISEMENT

Tags : தஞ்சாவூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT