தஞ்சாவூர்

தஞ்சாவூரில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

23rd Oct 2021 05:07 AM

ADVERTISEMENT

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி தஞ்சாவூா் கரந்தை பணிமனை முன் சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். குறைந்தபட்ச கூலி சட்டப்படி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். படி, ஊக்கத்தொகை பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும். அகவிலைப்படி உயா்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சிஐடியு கிளைத் தலைவா் முருகானந்தம் தலைமை வகித்தாா். இதில் மத்திய சங்க துணைப் பொதுச் செயலா் காரல்மாா்க்ஸ், எஸ்.இ.டி.சி. மத்திய சங்கத் துணைச் செயலா் வெங்கடேசன், ஓய்வு பெற்றோா் சங்கம் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags : தஞ்சாவூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT