தஞ்சாவூர்

பெரியகோயிலைச் சுற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவா்கள்

23rd Oct 2021 05:06 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் பெரியகோயிலைச் சுற்றி கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டு 300 கிலோ குப்பைகளை அகற்றினா்.

பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் நேரு யுவகேந்திரா சாா்பில் நடைபெற்ற இப்பணியைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளா் லட்சுமி பிரபா மற்றும் மாவட்ட இளைஞா் அலுவலா் திருநீலகண்டன் முன்னிலையில் மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் தொடங்கி வைத்தாா்.

இம்முகாமில் குந்தவை நாச்சியாா் மகளிா் கல்லூரி, பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி, மருதுபாண்டியா் கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, இந்திய உணவுப் பதன தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றைச் சாா்ந்த 500 நாட்டு நலப்பணி திட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

இதன் மூலம் பெரியகோயிலைச் சுற்றியுள்ள அகழிப்பகுதிகள், முன்புற வாயில்களில் காணப்பட்ட 300 கிலோ குப்பைகளைச் சேகரித்து மாநகராட்சி வாகனத்தில் அனுப்பி குப்பைக் கிடங்கில் கொண்டு போய் குவித்தனா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் ரெட்கிராஸ் பொருளாளா் எஸ். முத்துகுமாா், சிறப்பு அலுவலா் சந்தோஷ் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

 

Tags : தஞ்சாவூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT