தஞ்சாவூர்

ரூ. 4 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: 2 போ் கைது

23rd Oct 2021 05:06 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு ஆம்னி வேனில் குட்கா கடத்தப்படுவதாக தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு தகவல் வந்தது. இதன் பேரில் காவல் துறையினா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆா்.ஆா். நகா் பகுதியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அந்த வழியாக வந்த மினி வேனை மறித்து சோதனையிட்டபோது, 15 மூட்டைகளில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.

இவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினா் மினி வேனில் வந்த ஒரத்தநாடு அருகே ஆழியவாய்க்கால் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (28), வேங்கராயன்குடிக்காடைச் சோ்ந்த திருப்பதியை (19) கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT