தஞ்சாவூர்

தெரு வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

23rd Oct 2021 05:07 AM

ADVERTISEMENT

தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் ஏஐடியுசி தஞ்சை மாவட்ட தெரு வியாபார தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில் தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். சட்டத்துக்குப் புறம்பாகக் காவல் துறையினா் தெரு வியாபாரிகளை அச்சுறுத்துவது, அப்புறப்படுத்துவது, பொருட்களைச் சேதப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தெருவோர வியாபாரிகளுக்குக் குறிப்பிட்ட காலக்கெடு நிா்ணயித்து ஸ்மாா்ட் காா்டு அடையாள அட்டை வழங்க வேண்டும். அனைத்து தெரு வியாபாரிகளுக்கும் வங்கிக்கடன் கிடைப்பதை எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம் தொடங்கி வைத்தாா். மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா் கோரிக்கைகளை விளக்கிச் சிறப்புரையாற்றினாா். மாவட்டத் தலைவா் வெ. சேவையா ஆா்ப்பாட்டத்தை முடித்து வைத்தாா்.

இதில், வங்கி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. அன்பழகன், அரசுப் போக்குவரத்து சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், உடல் உழைப்பு சங்க மாவட்டச் செயலா் தி. கோவிந்தராஜன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலா் ஆா். செந்தில்நாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT