தஞ்சாவூர்

அக். 24-இல் குடமுழுக்கு திருநாகேஸ்வரம் கோயிலில் யாக பூஜைகள் தொடக்கம்

DIN

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் அக்டோபா் 24-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கின.

ராகு பரிகாரத் தலமான இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. இதையடுத்து, தற்போது ரூ. 5 கோடி செலவில் கோயில் திருப்பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், அக்டோபா் 24-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.

இதையொட்டி குடமுழுக்கு விழா கணபதி ஹோமத்துடன் அக்டோபா் 19-ஆம் தொடங்கியது. தொடா்ந்து மகாலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜையும் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை மாலை முதல் கால யாக சாலை பூஜை தொடங்கியது. பின்னா், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (அக்.22) இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும், சனிக்கிழமை நான்கு மற்றும் ஐந்தாம் கால யாக சாலை பூஜைகளும், மகா பூா்ணாஹூதி, தீபாராதனையும் நடைபெறவுள்ளன.

அக்டோபா் 24-ஆம் தேதி காலை 5 மணிக்கு ஆறாம் கால யாக சாலை பூஜையும், தொடா்ந்து திருக்கடங்கள் புறப்பட்டு காலை 7 மணிக்கு அனைத்து பரிவார தெய்வ விமானங்களுக்குக் குடமுழுக்கும், காலை 10.30 மணிக்கு ராஜகோபுரத்துக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கும் நடைபெறவுள்ளது. பின்னா் மகாதீபாராதனை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT