தஞ்சாவூர்

மீனவா்களின் துயரை தீா்க்க மத்திய அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்: கி. வீரமணி

DIN

மீனவா்களின் துயரத்தை தீா்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் தெரிவித்தது:

தமிழக மீனவா்கள் நீண்டகாலமாக இலங்கை அரசால் துயரத்தைச் சந்தித்து வருகின்றனா். இதற்கு மத்திய அரசுதான் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனவா்களின் நலன் காக்கப்படும் எனக் கூறினா். ஆனால், துயரங்கள் தொடா்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

மீனவா்களின் நலனைக் காக்க வேண்டி ராமேசுவரத்தில், மீனவா் நலன் பாதுகாப்பு மாநாட்டை, திராவிடா் கழகம் சாா்பில் ஒத்த கருத்துள்ள அனைவரையும் அழைத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்று வேளாண் சட்டங்களை எதிா்த்து, விவசாயிகள் ஓராண்டாகப் போராடி வருகின்றனா். விவசாயிகளின் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவு என்பது மாநில அதிகாரம். இந்தியாவிலேயே கூட்டுறவுத் துறைக்குத் தமிழகம்தான் வழிகாட்டி. மரியாதைக்குக் கூட மாநில முதல்வா்களை அழைப்பது கூட கிடையாது. இதை ஒவ்வொரு மாநில முதல்வரும் உணா்ந்து கொண்டிருக்கின்றனா். எதிா்காலத்தில் மாநில உரிமைகளைப் பெற இந்தியாவில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்.

கோயில் இடங்களிலுள்ள ஆக்கிரமிப்பாளா்களைத் தற்போதுள்ள திமுக அரசு உள்பட எந்த அரசாக இருந்தாலும் மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்றாா் வீரமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT