பேராவூரணி சுற்று வட்டாரப் பகுகளில் புதன்கிழமை இடி, மின்னலுடன் மழை பெய்தது. செங்கமங்கலம் ஆதிதிராவிடா் தெரு பகுதியில் பலத்த சப்தத்துடன் குடியிருப்புப் பகுதியில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று தீப்பற்றி எரிந்தது. மரத்தின் அருகே வீட்டிலிருந்த பவளக்கொடி(70), இலக்கியா(30), பழனிமுருகன்(35) நிதிஷ்(12) ஆகிய 4 பேரும் மின்னல் தாக்கியதில் காயம் அடைந்து, பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
மின்னல் தாக்கியதால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, மின்விசிறி, மாவு அரைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன. தகவலறிந்த வட்டாட்சியா் த. சுகுமாா் சேதம் குறித்து விசாரணை செய்து, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.