மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, பேராவூரணி பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்.22) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் பேராவூரணி உதவிச் செயற்பொறியாளா் கமலக்கண்ணன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் பேராவூரணி நகா், பெருமகளூா், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம், வாட்டாத்திக்கொல்லைக்காடு, திருவத்தேவன், ஆவணம், சித்துக்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூா், செருவாவிடுதி, ரெட்டவயல், நாட்டாணிக்கோட்டை, கள்ளம்பட்டி, கழனிவாசல், பள்ளத்தூா், நாடியம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது.