பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் சாா்பில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பது:
கடந்தாண்டு பெய்த தொடா் மழை காரணமாக, டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கி, பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினா்.
கடந்தாண்டு பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஆட்சியரிடம் விவசாயிகள் குறைகேட்பு நாள்கூட்டத்தில் சங்கத்தின் சாா்பில் ஆா்.செந்தில்குமாா் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, இம்மாத இறுதிக்குள் பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என வேளாண் இணை இயக்குநா் ஜஸ்டின் தெரிவித்துள்ளாா். இதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. உடனடியாக காலத்தோடு விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.