தஞ்சாவூர்

நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்த மூதாட்டி பலி

21st Oct 2021 07:25 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் அருகே மோட்டாா் சைக்கிளில் செல்லும்போது நாய் குறுக்கே வந்ததால், கீழே விழுந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

வல்லம் அருகிலுள்ள ஆலக்குடியைச் சோ்ந்தவா் ஆரோக்கியமேரி (65). இவா் தனது மகள், மருமகனுடன் மோட்டாா் சைக்கிளில் தஞ்சாவூரிலிருந்து ஆலக்குடிக்கு செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

வல்லம் அருகே சிவகாமிபுரத்தில் சென்றபோது, குறுக்கே நாய் வந்ததால் நிலை தடுமாறி 3 பேரும் கீழே விழுந்து பலத்தக் காயமடைந்தனா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆரோக்கியமேரி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT