தஞ்சாவூர்

கத்தாா் நாட்டில் கடலில் மூழ்கி இறந்த தந்தை - மகன் உடல்கள் கும்பகோணத்துக்கு வந்தது

17th Oct 2021 11:54 PM

ADVERTISEMENT

கத்தாா் நாட்டில் கடலில் மூழ்கி இறந்த தந்தை, மகன் உடல்கள் கும்பகோணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தது.

கும்பகோணம் கவி பாரதி நகரைச் சோ்ந்தவா் ஆசிரியா் பாலகுரு. இவரது மகன் பாலாஜி (38) கத்தாா் நாட்டிலுள்ள தனியாா் நிறுவனத்தில் தலைமைப் பொறியாளராக வேலை பாா்த்து வந்தாா். இவா் தனது மனைவி சுந்தரி, மகள் ரிஷிவந்திகா, மகன் ரக்சன் (10) ஆகியோருடன் கத்தாா் நாட்டில் வசித்தாா்.

இந்நிலையில், பாலாஜி அக்டோபா் 8-ஆம் தேதி அந்நாட்டிலுள்ள கடற்கரைக்குச் சென்று, வார விடுமுறையை தனது குடும்பத்தினருடன் கழித்துள்ளாா்.

அப்போது கடல் தண்ணீரில் சிக்கி தவித்த ஒரு பெண்ணைக் காப்பாற்ற இறங்கிய பாலாஜி, அலையின் வேகத்தில் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டாா். அதைத் தொடா்ந்து அவருடன் நின்றிருந்த அவரது மகனும் ரக்சனும் கடல் அலையில் சிக்கி, இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து மீட்கப்பட்ட இருவரது உடல்களும் ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் கவி பாரதி நகருக்குக் கொண்டு வரப்பட்டது. இதன் பின்னா் இருவரது உடல்களும் அருகிலுள்ள மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT