தஞ்சாவூர்

அய்யம்பேட்டை பகுதிகளில் அதிமுக பொன்விழா

17th Oct 2021 11:55 PM

ADVERTISEMENT

அய்யம்பேட்டை-பசுபதிகோவில் அண்ணாசிலை பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு, அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் கே.கோபிநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவா் அண்ணாமலை, தலைமைப் பொதுக்குழு உறுப்பினா் எஸ். மோகன் முன்னிலை வகித்தனா்.

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அதிமுகவினா், அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா். ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

அய்யம்பேட்டை பேருந்து நிலையம் அருகிலுள்ள எம்.ஜி.ஆா்.சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வில் ஒன்றிய அவைத் தலைவா் நடராஜன், மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் எஸ்.சதீஷ், துணைச் செயலா் முகமது இப்ராஹிம், மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணி இணைச் செயலா்கள் சி. முத்து, ராஜகோபால், கூட்டுறவு சங்க இயக்குநா் பழனிசாமி, நகரச் செயலா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சக்கரப்பள்ளி பெரிய பள்ளிவாசல் கடைவீதி அருகே கே.கோபிநாதன் தலைமையிலும், பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் கிழக்கு ஒன்றியச் செயலா் தியாகை. பழனிசாமி தலைமையிலும் அதிமுகவினா் எம்.ஜி.ஆா். ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT