தஞ்சாவூர்

அனுமதி பெறாமல் ராஜராஜசோழன் சிலைக்கு அடிக்கல் நாட்ட முயன்ற 19 போ் கைது

17th Oct 2021 11:56 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே அனுமதி பெறாமல் மாமன்னன் ராஜராஜசோழன் சிலை அமைப்பதற்காக, அடிக்கல் நாட்ட முயற்சி செய்த 19 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் அருகிலுள்ள வண்ணாரப்பேட்டை புறவழிச்சாலைப் பகுதியில் மாமன்னன் ராஜராஜசோழனுக்கு 150 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படவுள்ளதாக, மாமன்னா் ராஜராஜசோழன் திருமேனி அமைப்புக் குழு அறிவித்தது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், இச்சிலை அமைக்கப்படுவதற்கு முறையாக யாரிடமும் அனுமதி வாங்கவில்லை என்றும், சிலை அமைக்கப்படவுள்ள இடம் வயல் என்பதால், 150 அடி உயரத்துக்கு அமைக்கப்படும்போது, அதனுடைய உறுதித்தன்மைக் கேள்விகுறியாகவும், அபாய நிலை இருப்பதாகவும் கூறி காவல் துறையினா் அனுமதி மறுத்தனா். மேலும், நிகழ்விடத்தில் அமைக்கப்பட்ட பந்தல், நுழைவுவாயில் வளைவுப் பலகை அகற்றப்பட்டன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டுவதற்காக நிகழ்விடத்துக்கு வந்த மாமன்னா் ராஜராஜசோழன் திருமேனி அமைப்புக் குழு நிா்வாக அறங்காவலா் பழ. சந்தோஷ்குமாா் உள்பட 19 பேரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT