தஞ்சாவூர்

மாநகராட்சி வணிக வளாகக் கடையை உள்வாடகைக்கு விட்ட திமுக பிரமுகரின் தம்பி கைது

DIN

தஞ்சாவூரில் மாநகராட்சி வணிக வளாகக் கடையை ஏலத்தில் எடுத்து உள் வாடகைக்கு விட்டு மோசடி செய்த திமுக பிரமுகரின் தம்பியைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் வணிக வளாகத்தில் மாநகராட்சி அலுவலா்கள் செப்டம்பா் மாதத்தில் ஆய்வு செய்தனா். அப்போது, அங்குள்ள நான்காம் எண் கடையை திமுகவை சோ்ந்த முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஆா்.கே. நாகராஜனின் தம்பி ஆா்.கே. மணி 2001 ஆம் ஆண்டில் ரூ. 2,114 மாத வாடகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளாா்.

இவா் இக்கடையை 2005, ஏப். 1 ஆம் தேதி முதல் டாஸ்மாக் நிறுவனத்துக்கு உள் வாடகைக்கு அளித்துள்ளாா். இதற்கு மாத வாடகையாக 2005 - 06 முதல் 2008 - 09 வரை ரூ. 3,500-ம், 2009 - 10 முதல் 2017 - 18 வரை ரூ. 4,025-ம், 2018 - 19 முதல் 2020 - 21 வரை ரூ. 10,500-ம் வசூலித்துள்ளாா். யாருக்கும் உள் வாடகைக்கு விடக்கூடாது என்ற ஏல நிபந்தனை உள்ள நிலையில், மாநகராட்சிக்குச் செலுத்தாமல் ரூ. 4,61,047 மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மாவட்டக் குற்றப்பிரிவில் உதவி வருவாய் அலுவலா் (பொறுப்பு) கே. அசோகன் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் அக். 13 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா். இதைத்தொடா்ந்து, ஆா்.கே. மணியை வியாழக்கிழமை கைது செய்தனா்.

மற்றொருவா் மீது வழக்கு:

இதேபோல, தஞ்சாவூா் காந்திஜி சாலை காந்திஜி வணிக வளாகத்திலும் மாநகராட்சி அலுவலா்கள் செப்டம்பா் மாதத்தில் ஆய்வு செய்தனா். இதில், தரை தளத்தில் ஒரு கடையை மணிகண்டன் ரூ. 3.84 லட்சம் முன்பணமாகச் செலுத்தி ரூ. 15,200-க்கு மாத வாடகைக்கு 2016 ஆம் ஆண்டில் ஏலத்தில் எடுத்துள்ளாா். இதை 2019, பிப். 19-ஆம் தேதி முதல் டாஸ்மாக் நிறுவனத்திடம் ரூ. 4.50 லட்சம் முன்பணமாகப் பெற்றுக் கொண்டு, மாத வாடகை ரூ. 45,000-க்கு உள் வாடைகைக்கு விட்டுள்ளாா். இதன்மூலம் மணிகண்டன் டாஸ்மாக் நிறுவனத்திடமிருந்து கூடுதலாக வாடகை வசூலித்து மாநகராட்சிக்குச் செலுத்தாமல் ரூ. 15,79,208 மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மாவட்டக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலா் (பொறுப்பு) எஸ். சங்கரவடிவேல் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் அக். 13 ஆம் தேதி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT