தஞ்சாவூர்

கரோனா தடுப்பூசி முகாம் ஆலோசனைக் கூட்டம்

9th Oct 2021 12:41 AM

ADVERTISEMENT

பேராவூரணியில் கரோனா தடுப்பூசி முகாம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் பாலச்சந்தா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பேராவூரணி தவமணி, சேதுபாவாசத்திரம் கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமூா்த்தி, வட்டார மருத்துவ அலுவலா் .சௌந்தரராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

கூட்டத்தில் அக்டோபா் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள ஐந்தாம் கட்ட மெகா தடுப்பூசி முகாமை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மருத்துவா்கள் சரண்யா ரஞ்சித், வெங்கடேசன் , பேராவூரணி வா்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவா் ராஜேந்திரன், லயன்ஸ் சங்கத் தலைவா் ராஜா, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் அன்பரசன், பேராவூரணி, சேதுபாவாசத்திரம்ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சித்தலைவா்கள், செயலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.நிறைவில், வட்டாட்சியா் சுகுமாா் நன்றி கூறினாா். 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT