தஞ்சாவூர்

பண்னவயலில் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

9th Oct 2021 12:42 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டைவட்டம், பண்ணவயல் ஊராட்சியில் குயின்சிட்டி லயன்ஸ் சங்கம்சாா்பில், 3 ஆயிரம் பனைவிதைகள் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு பண்ணவயல் ஊராட்சி முன்னாள் தலைவா் ராஜாதம்பி தலைமை வகித்து, பனை விதைகள் நடும் பணியைத் தொடக்கி வைத்தாா். பண்ணவயல் ஏரி அருகே அரசு நிலத்தில் இவை நடப்பட்டது. மேலும், கம்பயன்கண்ணி பகுதியில் சாலையோரத்தில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்வில் பட்டுக்கோட்டை நகா்மன்ற முன்னாள் தலைவா் எஸ்.ஆா். ஜவகா்பாபு, குயின்ஸ்சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவா் செல்லக்கண்ணு, பொருளாளா் சிவசிதம்பரம், பச்சமுத்து, கோபிநாத், சுதாகரன், சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

3 ஆயிரம் பனை விதைகளை வழங்கிய சின்னக்கண்னு, 300 மரக்கன்றுகளை வழங்கிய ஏ.பி.சாமிநாதனுக்கு ஊராட்சி சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT