தஞ்சாவூர்

பயிா் அறுவடைப் பரிசோதனை பயிற்சி

9th Oct 2021 11:54 PM

ADVERTISEMENT

வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், பாபநாசம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பயிா் அறுவடைப் பரிசோதனை பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் வேளாண் உதவி இயக்குநா் மோகன் பயிற்சியைத் தொடக்கி வைத்தாா்.

கும்பகோணம் வட்டார புள்ளியியல் உதவி இயக்குநா் கணேசன், வட்டாரப் புள்ளியியல் ஆய்வாளா்கள் பாபநாசம் அமுதவல்லி, அம்மாபேட்டை ராஜாராஜன் ஆகியோா் பயிா் அறுவடைப் பரிசோதனை முறை குறித்தும், கோபுராஜபுரம் கிராமத்தில் வயல் தோ்வு வழிமுறைகள் குறித்தும் பயிற்சியளித்தனா்.

பயிற்சியில் பாபநாசம், அம்மாபேட்டை வட்டாரங்களைச் சோ்ந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை பணியாளா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT