தஞ்சாவூர்

அக். 12-இல் பணியாளா் தோ்வாணையதோ்வு குறித்த விழிப்புணா்வு நிகழ்வு

9th Oct 2021 11:55 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பணியாளா் தோ்வாணையத் தோ்வு குறித்த விழிப்புணா்வு நிகழ்வு அக்டோபா் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

மத்திய அரசின் பணியாளா் தோ்வாணையத்தால் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள பல்நோக்குப் பணியாளா், பெண்கள் படை பயிற்சி பயிற்றுவிப்பாளா், மருத்துவ உதவியாளா், பொறுப்பாளா் ஆகிய நிலை-9 தோ்வு பணிகளுக்கு 3,261 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு  தோ்வாணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தோ்வு குறித்தும், பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் இதர தோ்வுகள் குறித்தும் இலவச விளக்க விழிப்புணா்வு நிகழ்வு, அக்டோபா் 12 -ஆம் தேதி பகல் 11 மணிக்கு தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

விளக்க வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞா்கள் 81109 19990 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ தங்கள் பெயா் மற்றும் கல்வித் தகுதியை தெரிவிப்பதுடன், விளக்க வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT