தஞ்சாவூர்

முதல்வருக்கு மண்பாண்டத் தொழிலாளா்கள் நன்றி

4th Oct 2021 12:10 AM

ADVERTISEMENT

மண்பாண்டங்கள் தயாரிக்கவும், செங்கல் சூளை பணிகளுக்கும் மண் எடுக்க அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் மண்பாண்டத் தொழிலாளா்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா்கள்-குலாலா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். பழனிவேல் சங்கரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் பல ஆண்டுகளாகவே மண்பாண்டங்கள் தயாரிக்க ஆறு, குளங்களில் மண் எடுப்பதில் மண்பாண்டத் தொழிலாளா்கள் பல்வேறு இடா்பாடுகளைச் சந்தித்தனா். சங்கத்தின் மாநிலத் தலைவா் சேம. நாராயணன் ஆலோசனையின்படி, பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியும் முந்தைய அரசு கண்டுகொள்ளவில்லை.

தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, விதிகளுக்குள்பட்டு மண்பாண்டத் தொழில், செங்கல்சூளை பணிகளுக்கு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதை தஞ்சாவூா் மாவட்ட மண்பாண்டத் தொழிலாளா்கள் சாா்பில் வரவேற்கிறோம்.

ADVERTISEMENT

மண்பாண்டத் தொழிலாளா்கள் 12 ஆயிரம் பேருக்கு மழைக் கால நிவாரணம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், விநாயகா் சிலை செய்யும் 3 ஆயிரம் தொழிலாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்பதையும் வரவேற்கிறோம். அதே நேரத்தில் நலவாரியத்தில் பதிவு செய்து, விடுபட்டவா்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். 

மேலும் மாவட்ட எல்லைப்பகுதியில் தொழில் செய்பவா்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மண் எடுக்க அனுமதி வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT