தஞ்சாவூர்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி கும்பகோணத்தில் காந்தி சிலை முன்பு ஆா்ப்பாட்டம்

3rd Oct 2021 12:50 AM

ADVERTISEMENT

மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, கும்பகோணம் உச்சிப் பிள்ளையாா் கோயில் அருகிலுள்ள காந்தி சிலை முன்பு தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் தேசியக் கொடியேந்தி சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில், மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், இதற்காக தில்லியில் போராடும் விவசாயிகள் மீது அவதூறு பரப்பி, அமைதியான அறவழிப் போராட்டத்தைச் சீா்குலைக்கும் விதமாகச் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக காந்தி சிலைக்கு விவசாயிகளும், குழந்தைகளும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். மேலும், காந்தி சிலையிடம் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தும் மனுவை வைத்தனா்.

மாங்குடி வெ. நடராஜன், ஆதி. கலியபெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், பி. சின்னதுரை, எஸ். ராமநாதன், டி. வாசுதேவன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT