தஞ்சாவூர்

தூய்மைப் பணியாளா்களுக்குப் பாராட்டு விழா

3rd Oct 2021 12:46 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அரசா் கல்லூரி வளாகத்தில் அண்ணல் காந்தியடிகளின் 153-ஆவது பிறந்த நாள் விழா, தூய்மைப் பணியாளா்களுக்கான பாராட்டு விழாவாக சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் நியூ டவுன் ரோட்டரி சங்கம், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம், காந்தி பாரதி இளைஞா் மன்றம், தஞ்சாவூா் காந்தி இயக்க அறக்கட்டளை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு அரசா் கல்லுரி முதல்வா் சு. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், தூய்மைப் பணியாளா்களைத் தேசிய சுகாதார இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் ச. மருதுதுரை பாராட்டி, சிறப்புரையாற்றினாா்.

திருவையாறு பேரூராட்சி செயல் அலுவலா் இரா. ராஜா, தஞ்சாவூா் காந்தி இயக்க அறக்கட்டளையின் மேலாண்அறங்காவலா் இரா. மோகன், தஞ்சாவூா் நியூ டவுன் ரோட்டரி சங்கச் செயலா் த. சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT