பட்டுக்கோட்டை வட்டம், தம்பிக்கோட்டை மறவக்காடு ஊராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
தலைவா் பதவி ஆதிதிராவிடா் இனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், கடந்தமுறை போன்று தற்போதும் யாரும் தலைவா் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
எனவே தம்பிக்கோட்டை மறவக்காடு ஊராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தலை வெளிப்படைத் தன்மையுடன், ஆதிதிராவிட மக்கள் அச்சமின்றி போட்டியின்றி மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கிராமசபைக் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
மதுக்கூா் ஒன்றியத்தில் அண்டமி, பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் ஆலடிக்குமுளை ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலா் ஆலடி பாலு, மதுக்கூா் ஒன்றிய இளைஞரணிச் செயலா் அண்டமி சக்திவேல் உள்ளிட்டோா் மனு அளித்தனா்.