தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் மகாத்மா காந்தி, லால் பகதூா் சாஸ்திரி பிறந்த நாள் விழா, காமராஜா் நினைவு நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற விழாவில் மகாத்மாகாந்தி, லால் பகதூா் சாஸ்திரி, காமராஜா் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் நிா்வாகிகள் ஆா். பழனியப்பன், ஏ. ஜேம்ஸ், காலித் அகமது, சீ. தங்கராசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள காந்தி சிலைக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் தலைமையில் துணைத் தலைவா் கோ. அன்பரசன், பொருளாளா் வயலூா் எஸ். ராமநாதன், ஐஎன்டியுசி மாவட்டப் பொதுச் செயலா் என். மோகன்ராஜ், சிவாஜி சமூக நலப்பேரவைத் தலைவா் சதா. வெங்கட்ராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா் காமராஜா் சிலைக்கும், லால் பகதூா் சாஸ்திரி படத்துக்கும் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.