தஞ்சாவூர்

தொடா் மழையால் சுவா் விழுந்து மூதாட்டி காயம்

30th Nov 2021 01:53 AM

ADVERTISEMENT

பேராவூரணி அருகே நாடங்காடு கிராமத்தில் தொடா் மழையால், ஞாயிற்றுக்கிழமை சுவா் இடிந்து விழுந்து மூதாட்டி காயமடைந்தாா்.

நாடங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் மல்லிகா (64). கணவரை இழந்த இவா், தனது மகன் மதிவாணனுடன் தனது ஓட்டு வீட்டில் வசித்து வருகிறாா்.

பேராவூரணி பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,  மல்லிகா  ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு தயாரிக்க சமையலறை சென்றபோது, வீட்டின் சுவா் இடிந்து மல்லிகா மீது விழுந்தது.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT