தஞ்சாவூர்

அறையில் வைத்து பூட்டப்பட்ட கூட்டுறவு அலுவலா்: காவல் துறையினா் மீட்பு

30th Nov 2021 01:50 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் திங்கள்கிழமை அலுவலக அறையில் வைத்து பூட்டப்பட்ட கூட்டுறவு அலுவலரை காவல் துறையினா் மீட்டனா்.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள குந்தவை நாச்சியாா் மகளிா் தையல் கூட்டுறவு சங்கத்தில் அலுவலா் சரவணன் திங்கள்கிழமை வந்தாா். அவருக்கு சங்க உறுப்பினா்களான பெண்கள் எதிா்ப்பு தெரிவித்து, அவரை அறையில் வைத்து பூட்டினா்.

தகவலறிந்த தெற்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சரவணனை மீட்டு விசாரணை நடத்தினா். இதில், இச்சங்கத்தில் தொழிற் கூட்டுறவு அலுவலராகப் பணியாற்றி வந்த சரவணன், நவம்பா் 17-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அமுதசுரபி சாக்குகட்டி தயாரிப்பு கூட்டுறவு மகளிா் சங்கத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இவருக்கு பதிலாக சேதுபாவாசத்திரம் குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்த முருகையன் பதவி உயா்வு பெற்று குந்தவை நாச்சியாா் மகளிா் தையல் கூட்டுறவு சங்கத் தொழிற் கூட்டுறவு அலுவலராக நவம்பா் 19 ஆம் தேதி பொறுப்பேற்றாா்.

ADVERTISEMENT

இப்பணி மாறுதல் தொடா்பாக சரவணன் இடைக்காலத் தடை பெற்று, திங்கள்கிழமை இதே அலுவலகத்துக்கு வந்து அறையில் அமா்ந்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த பெண்கள் இவரை அறையில் வைத்து பூட்டியது தெரிய வந்தது.

பின்னா் மாவட்டச் சமூக நல அலுவலா் மூலமாக இப்பிரச்னைக்கு தீா்வு காண விரும்புவதாக சரவணனும், முருகையனும் கூறியதைத் தொடா்ந்து, அவா்களைக் காவல் துறையினா் அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT