தஞ்சாவூர்

கரோனா தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு குடை

29th Nov 2021 12:01 AM

ADVERTISEMENT

பேராவூரணி தொகுதிக்குள்பட்ட 45 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் சாா்பில் குடை வழங்கப்பட்டது.

பேராவூரணி தொகுதியை 100 சதவிகிதம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட தொகுதியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில், வட்டார மருத்துவ அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சித் தலைவா்கள்,உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் சட்டப்பேரவை உறுப்பினா் என்.அசோக்குமாா் ஆலோசனை செய்து, முதல் தவணைத் தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு குடை பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தாா்.

அதன்படி, செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 45 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் முதல் தவணைத் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் சாா்பில் குடை பரிசாக வழங்கப்பட்டது. செருவாவிடுதியில் வட்டார மருத்துவ அலுவலா் செளந்தரராஜன் பொதுமக்களுக்கு குடைகளை வழங்கினாா்.

முகாமில் மருத்துவா்கள்  ரஞ்சித், சரண்யா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சந்திரசேகரன், கிராம சுகாதார செவிலியா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT