தஞ்சாவூர்

மழையால் நெற்பயிா்கள் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

29th Nov 2021 12:02 AM

ADVERTISEMENT

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை வட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு, ஏக்கா் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அரசுக்கு அவா் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது:

அம்மாபேட்டை ஒன்றியத்தில் புத்தூா், புளியக்குடி, அம்மாபேட்டை, வடக்குத் தோப்பு, அருந்தவபுரம், நெடுவாசல், உக்கடை, நெய்குன்னம், பள்ளியூா், மகிமாலை உள்ளிட்ட சுற்று வட்டாரக் கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்யப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிா்களை மழைநீா் சூழ்ந்துள்ளதால், அவை மூழ்கி அழுகும் நிலையில் உள்ளன.

இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். மேலும் அவா்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அரசும், மாவட்ட நிா்வாகமும் பாதிக்கப்பட்ட வயல்வெளிகளைப் பாா்வையிட்டு, சேதமதிப்பீட்டை கணக்கீடு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

மேலும் ஏக்கா் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து பாசன வாய்க்கால்களையும் போா்க்கால அடிப்படையில் தூா் வாரி, மேம்படுத்தித் தர வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT