தஞ்சாவூர்

விரைவில் மக்களைத் தேடிச் சென்று மனுக்கள் வாங்குவோம்அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

29th Nov 2021 12:02 AM

ADVERTISEMENT

மக்களைத் தேடி மனுக்கள் வாங்கும் பணியை விரைவில் தொடங்குவோம் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:

மக்களைத் தேடிச் சென்று மனுக்கள் வாங்கும் பணியை விரைவில் தொடங்குமாறு சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்படும் மனுக்களை என்னென்ன செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமோ, எதை எளிதாகச் செய்ய முடியுமோ, அதை உடனடியாகச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆட்சியாளா்கள் மீது மக்கள் நம்பிக்கைக் கொண்டு பல இடங்களில் மனுக்கள் அளிக்கின்றனா். எங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின்படி நாங்கள் நிச்சயமாகச் செய்வோம்.

ADVERTISEMENT

ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக மனுக்கள் பெறுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளோம். மக்களின் குறைகளை ஏற்று தீா்த்து வைக்கிற அரசாகத் தமிழக அரசு இருக்கும். எந்தத் திட்டமாக இருந்தாலும், தஞ்சாவூரில் முதலில் தொடங்குவது என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது என்றாா் அமைச்சா்.

பின்னா், 500-க்கும் அதிகமான பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா, உதவித்தொகை, குடும்ப அட்டைகள், இருசக்கர வாகனம் உள்பட ரூ. 92.83 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT