தஞ்சாவூர்

கிணற்றில் விழுந்தசிறுவன் உயிரிழப்பு

28th Nov 2021 11:59 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகிலுள்ள தங்கப்ப உடையான்பட்டியைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி மகன் மகேஷ் (16). ஐ.டி.ஐ. மாணவரான இவா், ஞாயிற்றுக்கிழமை தங்களது வயலிலுள்ள கிணற்றில் குளிப்பதற்காக இறங்கினாா். அப்போது கால் தடுமாறி கிணற்றில் விழுந்த இவா், 35 அடி ஆழ தண்ணீரில் மூழ்கினாா்.

தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று, கிணற்றிலிருந்த தண்ணீரை மோட்டாா் மூலம் இறைத்து, வெளியேற்றினா். இதையடுத்து மகேஷ் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT