தஞ்சாவூர்

‘வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்’

28th Nov 2021 12:24 AM

ADVERTISEMENT

தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றாா் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலா் பிரிசில்லா பாண்டியன்.

இக்கட்சியின் தலைவா் ஜான் பாண்டியனின் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் தெற்கு மாவட்ட தமுமுக சாா்பில் பட்டுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்று ஏழை, எளிய மக்களுக்கு தையல் இயந்திரங்கள், சேலைகள், பள்ளி மாணவா்களுக்கு புத்தகங்கள், எழுதுப் பொருள்களை வழங்கி, பிரிசில்லா பாண்டியன்கூறியது:

பட்டுக்கோட்டை பகுதியில் வீட்டுமனைப் பட்டா இல்லாத ஏழைகளுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. எனவே அத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

விழாவுக்கு மாவட்டச் செயலா் ராஜா பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT