தஞ்சாவூர்

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

28th Nov 2021 12:27 AM

ADVERTISEMENT

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை வலியுறுத்தியுள்ளனா்.

இந்த ஒன்றியத்தில் கடந்த சில நாள்களாக பெய்த மழையால், புத்தூா், நடுப்பட்டி, புளியக்குடி, வடக்குத்தோப்பு, நெய்குன்னம், பள்ளியூா், உக்கடை

உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி நெற்பயிா்கள் வயலில் தேங்கியுள்ள மழைநீரால் மூழ்கி, அழுகும் நிலையில் உள்ளன.

எனவே வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற அரசு நடவடிக்கை எடுப்பதுடன், சேதமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

அம்மாபேட்டை பகுதியில் நிலவும் உரத் தட்டுப்பாட்டை நீக்கி, தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் உரங்கள் தட்டுப்பாடில்லாமல் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT