தஞ்சாவூர்

மதா் தெரசா நல வாழ்வு மையத்துக்கு மருத்துவமனைக்கான தேசிய தரச் சான்றிதழ்

28th Nov 2021 12:28 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மதா் தெரசா நல வாழ்வு மையத்துக்கு மருத்துவமனைக்கான தேசிய தரச் சான்றிதழ் அண்மையில் வழங்கப்பட்டது.

தஞ்சாவூா் மதா் தெரசா பவுண்டேஷன் 20 ஆண்டுகளாகப் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக மதா் தெரசா நலவாழ்வு மையத்தை நடத்தி வருகிறது.

இம்மையத்துக்கு மருத்துவமனைக்கான தேசிய அங்கீகார வாரியம் மூலம் தேசிய தரச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.இதில் , தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தரச்சான்றிதழை மதா் தெரசா பவுண்டேசன் தலைவா் ஏ.ஆா். சவரிமுத்துவிடம் வழங்கினாா்.

நிகழ்வில் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வா் எம். சிங்காரவேல், திருச்சி

ADVERTISEMENT

கிம்ஸ் மருத்துவமனைத் தலைவா் ராஜரத்தினம், மூத்த மருத்துவா்கள் சிவராமன், ஜோசப் விக்டா், ஐ.எம்.ஏ. தஞ்சாவூா் தலைவா் சசிராஜ், பொறுப்பாளா்கள் அமிா்தகனி, நல்லதம்பி, காா்த்திகேயன், தஞ்சாவூா் தொழில், வா்த்தகக் கழகத் தலைவா் என்.டி. பாலசுந்தரம், தஞ்சாவூா் தெற்கு ரோட்டரி சங்கத் தலைவா் விஜய் அமல்ராஜ், தொழிலதிபா் பந்தல் சிவா, பவுண்டேஷன் அறங்காவலா்கள் சம்பத் ராகவன், கோவிந்தராஜ், முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT